இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறும்போது, 'மத்திய பட்ஜெட் அனைவருக்குமானது. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அமைந்துள்ளது. முக்கியமாக நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் சிறுதொழில் செய்வோருக்கு நன்மையளிக்க கூடிய பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. தேர்தலுக்கு பின் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான ட்ரெய்லர்தான் இந்த இடைக்கால பட்ஜெட். இன்றைய பட்ஜெட்டின் பலனாக 12 கோடி விவசாயிகள் பலன் பெறுவோர். ஒவ்வொரு கடைக்கோடி குடிமகனும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் திட்டங்கள் தான் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன' என கூறினார்.