நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திலேயே மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா, தன்னுடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கருணை மனுவை குடியரசுத்தலைவர் உரிய முறையில் ஆராயவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும், குற்றவாளி வினய் சர்மாவின் உடல்நலம் மற்றும் மனநலம் நல்லமுறையில் உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கினர்.
இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் போது, நீதிபதி பானுமதி நீதிமன்றத்திலேயே மயக்கமடைந்தார். பின்னர் நீதிபதி பானுமதி அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கடும் காய்ச்சல் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பின்னர் அதற்குரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.