Published on 14/08/2018 | Edited on 14/08/2018
![President's Speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/DYR_7rpEWWqcTUys6FWIuuxOohRkD2OS_Ig0fLKnDm4/1534245510/sites/default/files/inline-images/maxresdefault-2.jpg)
இந்திய திருநாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கின்றன. இந்நிலையில் இன்று குடியரசு மாளிகை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் மக்களுக்கு சிறப்புரையாற்ற உள்ளார். முதலில் இந்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் உரையாற்ற உள்ளார். பின்னர் அந்தந்த மொழிகளில் அவரது உரைகள் மொழிபெயர்க்கப்பட்டு இரவு 8 மணியளவில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.