காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக பணியமர்த்தபட்டிருக்கிறார்.
காஷ்மீரை சேர்ந்த இராம் ஹபீப் என்ற முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண் அடுத்தமாதம் ஏர் இந்தியா விமானியாக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம் காஷ்மீரில் முதல் முஸ்லீம் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார் இராம் ஹபீத்.
இவருக்கு சிறுவயதிலேயே வனவியல் படிக்க வேண்டும் என ஆசை இருந்தது தன் ஆசையை நிறைவேற்றும் வகையில் டேராடூனில் படித்து அதற்கான பட்டமும் பெற்றார். அதனை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள ஷெரீ காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் விவசாய அறிவியலில் பட்டம் பெற்ற அவர் திடீரென விமானி ஆகவேண்டும் என்ற கனவுடன் அமெரிக்காவில் விமான பள்ளியில் படித்தார். 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் வர்த்தக ரீதியில் விமானம் ஓட்டுவதற்கான லைசன்ஸையும் பெற்றார்.
தற்போது டெல்லியில் விமான லைசன்ஸ் பெற பயிற்சி வகுப்பு நடத்தும் பள்ளியில் ஆசிரியராக உள்ள அவர் ஏர் இந்தியா விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.