தமிழகத்தில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது, முதல்கட்டமாக சிறப்பு வகுப்பில் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
![MEDICAL](http://image.nakkheeran.in/cdn/farfuture/xCdpYH46VFcQzmxGjLUN3NpJ4IqTzhOypyB71-Dv6Jw/1533347644/sites/default/files/inline-images/counselling.jpg)
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 11 -ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலுள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து கடந்த மாதம் 28 -ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் வரும் மருத்துவ கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒரு திருநங்கை உட்பட 27 ஆயிரத்து 417 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதை தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று முதல் வரும் 10 தேதி வரை நடக்கவிருக்கிறது. இன்று துவங்கியிருக்கும் முதல்கட்ட கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள் அப்படிப்படையினாலான சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்தவ கலந்தாய்விற்கு வரும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வின் நுழைவு சீட்டு, நீட் மதிப்பெண் சான்றிதல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதல்,பாஸ்போர்ட் அல்லது குடும்ப அட்டை,இருப்பிட சான்றிதழ் போன்ற அனைத்து அசல் சான்றிதல்களையும் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தபட்டிருந்தது. அதேபோல் ஆதார் அட்டையும் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பித்தக்கது.