Skip to main content

உலக பல்கலைக்கழக தரவரிசை: டாப் 200இல் மூன்று இந்திய பல்கலைக்கழகங்கள் - பிரதமர் வாழ்த்து!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

narendra modi

 

குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS), உலகெங்கும் உள்ள உயர்படிப்புகள் குறித்த தகவல்களையும், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களையும் வழங்கும் புகழ்பெற்ற நிறுவனமாகும். மேலும் இந்த நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களை மதிப்பிட்டு, தரவரிசை பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2022, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

மொத்தமாக 1,300 பல்கலைக்கழகங்களை மதிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசையில் மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்கள், முதல் 200 இடங்களுக்குள் வந்துள்ளன. இந்த தரவரிசையில் ஐ.ஐ.டி. பம்பாய் 177வது இடத்தையும், ஐ.ஐ.டி. டெல்லி 185வது இடத்தையும், ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு 186வது இடத்தையும் பிடித்துள்ளன. உலக அளவில் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியப் பல்கலைக்கழகங்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு, ஐ.ஐ.டி. பம்பாய் மற்றும் ஐ.ஐ.டி. டெல்லிக்கு வாழ்த்துகள். இன்னும் அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் உலகளாவிய சிறப்பை பெறுவதை உறுதி செய்யவும், இளைஞர்களிடையே அறிவுசார் வலிமையை ஆதரிக்கவும் முயற்சிகள் நடந்துவருகின்றன" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்