Published on 05/03/2019 | Edited on 05/03/2019
டெல்லியில் நடைபெற்ற இந்தோ - பசிபிக் கடல் பகுதி நாடுகளின் கருத்தரங்கில் இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியா பசிபிக் கடல்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதிகள் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சுனில் லன்பா தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட நாட்டின் ஆதரவோடு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியா எதிர்கொண்டதாக பாகிஸ்தானை மறைமுகமாக அவர் குறிப்பிட்டார். அதுபோல தான் புல்வாமா தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பயங்கரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்த பயிற்சி பெற்று வருவது தொடர்பான தகவல்கள் இந்திய கடற்படைக்கு கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கடற்வழியாக கூட தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.