Published on 14/09/2021 | Edited on 14/09/2021

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது. ஆனால் கேரளாவில் மட்டும் கரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இந்தியாவில் பதிவாகும் கரோனா பாதிப்புகளில் அதிகமான பாதிப்புகள் கேரளாவில் இருந்து பதிவாகி வருகிறது.
இந்தநிலையில் கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 15,876 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 129 உயிரிழந்துள்ளனர். நேற்று கேரளாவில் 15,058 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் நேற்று 16.39 சதவீதமாக இருந்த கரோனா உறுதியாகும் சதவீதம் இன்று 15.12 சதவீதமாக கூறியுள்ளது.