ஜம்மு காஷ்மீரில் பயங்கரத் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபார் அருகே உள்ள ஷன்கெர் கந்த் பிராந்த் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய உளவு தகவல் வந்தது. இதையடுத்து, அந்தபகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் குவாஸிகுண்ட் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்புப் படைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலைியல், ஜம்மு காஷ்மீரின் மற்றொரு பகுதியான சோஃபோரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புப் படை வீரர்களின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு எல்லையோரப் பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதன்காரணமாக அந்த அமைப்பின் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் சோஃபோரைச் சேர்ந்த நயீன் என்பதும், மற்றொருவன் பாட்டன் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்பதும் தெரியவந்தது.