கரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சுய ஊரடங்கு காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் செயல்படுகின்றன. நாடு முழுவதும் 3000- க்கும் மேற்பட்ட ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளனர்.
கரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.