Published on 07/04/2021 | Edited on 07/04/2021
![Twopasses away in tiger attack in Maharashtra](http://image.nakkheeran.in/cdn/farfuture/P64o8Z2k1Z5buVTrhRSRvVGL_Y3s7jdFEte4Jza-SWQ/1617775150/sites/default/files/inline-images/died-600x400_9.jpg)
மஹாராஷ்ட்ரா மாநிலம், பவன்பார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 60 வயதான கமலகர் ரிஷி மற்றும் 48 வயதுடைய தனுஜி. இவர்கள் இருவரும் மதூக மலர்களைப் பறித்து வருவதற்காக பிரம்புரி வட்டத்துக்குட்பட்ட சிந்திவாகி காட்டுப் பகுதிக்கு நேற்று முன் தினம் (05.04.2021) சென்றனர். இரவு நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவர்களின் குடும்பத்தினர் பல இடங்களிலும் தொடர்ந்து தேடி வந்தனர். பின்னர் போலீசிடம் புகார் அளித்ததன் பேரில், போலீசாரும் வனத்துறையினரும் இணைந்து அவர்களை தேடினர். அதில் காட்டுப்பகுதியில் அவர்களின் சடலங்கள் கிடப்பதை நேற்று காலை வன ஊழியர்கள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் புலி தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.