![hj](http://image.nakkheeran.in/cdn/farfuture/Im69OO4gcqq_KmQfvWS-GzCUEEpQWtHlR-N9BDkDGE0/1596269590/sites/default/files/inline-images/gh_35.jpg)
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
பொதுவாக தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்த தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர், அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மேலும், இந்த தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா என்ற பெண்ணை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதைதொடர்ந்து கேரளாவில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஸ்வப்னா வீட்டில் இன்று சோதனை நடத்தினார்கள். இதற்கிடையே இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஸ்வப்னாவுக்கு, என்.ஐ.ஏ. நீதிமன்றம் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது.