Skip to main content

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையென்றால் இலவச சிகிச்சை இல்லை - கேரளா அதிரடி!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

pinarayi vijayan

 

இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில், பல்வேறு கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் நேற்று அம்மாநிலத்தில் நிலவும் கரோனா நிலை குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய பினராயி விஜயன், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை வழங்காது எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வாமை அல்லது ஏதேனும் நோய் காரணமாகத் தடுப்பூசி போடத் தயங்குபவர்கள், இலவச சிகிச்சை பெற அரசு மருத்துவரிடமிருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கான காரணம் தொடர்பாகச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

 

அதே போல், உடல்நல பிரச்சனைகளால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களும், கல்வி நிறுவன பணியாளர்களும் பணிக்குத் திரும்ப, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கான காரணம் தொடர்பாக அரசு மருத்துவரிடமிருந்து சான்று பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கூறியுள்ள பினராயி விஜயன், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களும், கல்வி நிறுவன பணியாளர்களும் வாரம் ஒருமுறை கரோனா பரிசோதனை சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும் எனவும், அனைத்து அரசு ஊழியர்களும் இந்த உத்தரவு பொருந்தும் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்