Published on 30/11/2018 | Edited on 30/11/2018
![sss](http://image.nakkheeran.in/cdn/farfuture/p0ZCIVRjmvHOqD9PZgVHDd8IIS9DUXkP8kj08eGOCCs/1543572972/sites/default/files/inline-images/ss%20in.jpg)
காலிஸ்தான் ஆதரவு தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சித்துவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். கர்தார்பூர் சாலை அடிக்கல் நாட்டு விழாவுக்காக பாகிஸ்தான் சென்றிருந்த காங்கிரஸ் எம்.பி நவஜோத் சிங் சித்து, அங்கு காலிஸ்தான் ஆதரவு தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசியுள்ள சுப்ரமணிய சுவாமி, சித்துவை தேசிய புலனாய்வு அமைப்பு உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவர் எங்கெங்கு சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் போன்றவற்றை விசாரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.