தெலங்கானாவில் இண்டர்மீடியட் எனப்படும் பள்ளி மேனிலை வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுமார் 9 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் வெறும் 3 லட்சம் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பல நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் நவ்யா என்ற மாணவிக்கு 99 மதிப்பெண்களுக்கு பதிலாக 0 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தெலுங்கு பாடத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் தவறுதலாக 0 மதிப்பெண்கள் என தேர்வு முடிவுகளில் வெளியானது.
இதனையடுத்து இண்டர்மீடியட் கல்வி வாரியம், விடை தாள் திருத்தும் பணிக்கு மேற்பார்வையாளராக இருந்த ஸ்ரீ நாராயணா ஜூனியர் கல்லூரியின் தெலுங்கு பேராசிரியருக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.