![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/2WETaevJwrwRtA8YSiJPXppJ0mEsPczbFJbUNTYIF9w/1621835246/sites/default/files/inline-images/1.1_3.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்துவருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 34 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,22,315 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,454 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து நேற்று ஒரேநாளில் 3,02,544 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 2.37 கோடி பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 27 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். பாதிப்பு ஒருபுறம் குறைந்துவந்தாலும் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவாக கடந்த சில நாட்களாக அதிகமாக பதிவாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.