டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துக்கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகளே இல்லாத நாடாக மாற்றினால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது. மேலும் நாங்கள் சுமூகமான சூழலை உருவாக்கவும் தயாராக உள்ளோம். அவர்கள் கேட்டுக்கொண்டால் பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். ஆனால், பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம். இம்ரான்கான் பெருந்தன்மையானவர், அமைதியை விரும்புகிறவர் என சிலர் சொல்கிறார்கள். உண்மையிலேயே அவர் அப்படிப்பட்டவராக இருந்தால், அவரால் முடிந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கட்டும். அவர் எவ்வளவு பெருந்தன்மையானவர் என்பது இதில் தெரிந்து விடும்” என கூறினார்.