Skip to main content

காஷ்மீர் விவகாரம்;பதவியை ராஜினாமா செய்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி!

Published on 25/08/2019 | Edited on 26/08/2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கி கடந்த 6-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முமுவதும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில் காஷ்மிரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அடக்குமுறை அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளா கோட்டயத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

Kerala IAS officer resigns  post  for Kashmir affairs

 

2012- ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜியில் இந்தியா அளவில் 59 ஆவது இடம் பிடித்த கண்ணன் கோபிநாத் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை செயலாளராக இருந்தார். அவர் கடந்த 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

பின்னர் அவர் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கூறும் போது…

என் கருத்துரிமையை மீண்டும் நான் பெற விரும்புகிறேன். ஒரு நாளாவது நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டியிருக்கின்றன. அந்த மக்கள் தங்கள் உரிமையை இழந்து இன்று 19 நாட்கள் ஆகின்றன. நான் செய்தித்தாள் நிறுவனம் நடத்தியிருந்தால் அந்த செய்தி தாளில் வெறும் 19 எண்ணை மட்டும் தான் பிரசுரித்து இருப்பேன் அதை தான் தினமும் செய்தியிருப்பேன்.

நான் நிறைய நம்பிக்கையோடு இந்திய ஆட்சி பணிக்கு வந்தேன். குரலற்றவர்களின் குரலாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன். ஆனால் இங்கே என் குரலை நான் இழந்து விட்டேன் என்றார் கண்ணன் கோபிநாத். இவர் தான் கேரளாவில் நடந்த மழை வெள்ள நிவாரணத்தின் போது நிவாரண உதவிகள் வழங்கியதோடு விடுப்பு எடுத்து கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு கேரளா முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கேரளா ஐஏஎஸ் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்