Skip to main content

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

 

baijal


 

 


அதிகராங்களுக்கு உரிமை கொண்டாடும் ஆளுநர், பணிகளை செய்யாதது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும், மாநகராட்சி அதிகராங்களுக்கு உரிமை கொண்டாடும் டெல்லி ஆளுநர், பணிகளை செய்யாதது ஏன். தனக்கு தான் அதிகாரம், நான் மிகப்பெரிய மனிதர் என்று கூறுபவர் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கண்டித்துள்ளது.

 

 

 

தற்போது டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற அதிகார சண்டை நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்? 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Next Chief Justice of Supreme Court Udai Umesh Lalit?

 

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டதன் பேரில், உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைச் செய்துள்ளார். 

 

நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வழக்கறிஞராக திகழ்ந்த உதய் உமேஷ் லலித், உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உதவக்கூடிய வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். குறிப்பாக, 2ஜி வழக்கு விசாரணையின் போது, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞராக நேரில் ஆஜராகி வாதிட்டிருந்தார். 

 

கடந்த 2014- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13- ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு கோப்புகளை அனுப்பும். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்திற்கான தலைமை நீதிபதியைத் தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். 

 

எனினும், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டால், வரும் நவம்பர் 8- ஆம் தேதி வரை மட்டுமே அவரின் பதவிக்காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

"இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி!" - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

agricultural acts supreme court judgement dmk party mk stalin

 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தும், விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் குழு ஒன்றை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

 

agricultural acts supreme court judgement dmk party mk stalin


அதன் தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி! அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இருப்பினும் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.