
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மூன்று முறை தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையாகவே தொடர்ச்சியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேச மாநிலம் கிழக்கு காமெங் பகுதியில் அதிகாலை 5.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. கிழக்கு காமெங் பகுதியில் அதிகாலை 3.40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது. அதே பகுதியில் நேற்று நள்ளிரவு 1.49 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுவும் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.