Skip to main content

'சந்திரபாபு நாயுடு செய்த பாவம் போக வேண்டும்'-ஜெகன்மோகன் ரெட்டி எடுத்த திடீர் முடிவு

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
NN

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்டில் மிருக கொழுப்பு கலக்கப்பட்டதால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க கோவிலில் சிறப்பு யாகம் செய்த திருப்பதி கோவில் நிர்வாகம், பக்தர்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி 'ஸ்ரீ வெங்கடேசா... நாராயணா...' என்று மந்திரங்களை உச்சரிக்க பக்தர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தது. கடந்த நான்கு நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தோஷம் நீக்க யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்ட நிலையில் நம்பிக்கையுடன் பக்தர்கள் லட்டு வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.

MN

 

டெண்டர் விதிகளை மீறியதாக திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏஆர் டெய்ரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானதின் கொள்முதல் மேலாளர் முரளிகிருஷ்ணா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமியை அவமதித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசியல் லாபத்திற்காக லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாகவும், அந்த கலப்பட லட்டை பக்தர்கள் சாப்பிட்டது போல் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் லட்டு பிரசாதத்தின் புனிதம் மற்றும் மகிமையை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அவர் செய்த அந்த பாவத்தை போக்க வரும் 28ம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நடத்தும் சிறப்பு பூஜைகளில் கட்சியை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்