Published on 11/03/2019 | Edited on 11/03/2019

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள், மன்மோகன் சிங்கை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க விரும்புகின்றனர். ஆனால், மன்மோகன் சிங், அவர்களின் இந்த முடிவிற்கு சாதகமான பதிலை தர தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு டெல்லி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அதில் பாஜக விடம் தோல்வி அடைந்தார். அதன்பின்னரான தேர்தல்களில் நியமன எம்.பி யாக நியமிக்கப்பட்டு பின் பிரதமரானார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் அவரை அமிர்தசரஸில் நிற்க வைக்க முயற்சி நடப்பதாகவும், அதனை அவர் மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.