கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 7-ம் தேதி இரவு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் தொடங்கியது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரம் தவிர மற்ற13 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதில் மலப்புரம் மற்றும் வயநாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சாிவில் ஏராளமானோ் சிக்கியுள்ளனா்.
இதில் மலப்புரம் கவழப்பாறையில் ஏற்பட்ட நிலச்சாிவில் 17 குடும்பங்கள் மண்ணுக்கடியில் புதைந்து. அதில் 63 போ் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது.அவா்கள் அத்தனை பேரும் இறந்து இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்பு பணியில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 58 உடல்களை மீட்க மீட்பு படையினா் மண்ணை தோண்டி வருகின்றனா்.
இதே போல் வயநாடு குத்துமலையில் 18 போ் மண் சாிவில் சிக்கியுள்ளனா். அதில் 9 போ் உடல்கள் மீட்கபட்டுள்ளது. இதே போல் கேரளாவில் பல மாவட்டங்களில் மழை இடைவிடாமல் பெய்து கொண்டியிருப்பதால் வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளில் பலா் சிக்கி உயிாிழந்துள்ளனா். அவா்களை மீட்கும் பணியில் மத்திய மாநிலஅரசின் மீட்பு படையினா் முமு வீச்சில் இறங்கியுள்ளனா்.
தற்போது கேரளாவில் பலி எண்ணிக்கை 56 -ஐ தாண்டியுள்ளது. மேலும் இது 100-ஐ தாண்டும் என்று மீட்பு படையினா் கூறியுள்ளனா். இதற்கிடையில் வயநாட்டில் உள்ள பிரதான அணையான பாணாசுர சாகா் அணை அதிகாாிகளின் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இன்று மாலை திறந்து விடப்பட்டது.