மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் நான்கு நாட்களில் டெல்லி, மும்பை, கேரளா என நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
கடந்த திங்களன்று கொல்கத்தாவில் உள்ள மருத்தவகல்லூரி மருத்துவமனையில், நோயாளியின் உறவினர் ஒருவர் அங்கு பணியாற்றும் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அரசு மருத்துவர்களும் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர்.
இதனால் மாநிலம் முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்களுடன் பேசுச்சுவார்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்த நிலையில் இன்று டெல்லி, மும்பை, கேரளா, தெலங்கானா என நாட்டின் முக்கிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் ஒரு மருத்துவரை அடித்ததால் ஏற்பட்ட போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது அந்தந்த மாநில அரசுகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது.