
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.