Skip to main content

லாரியின் முன்பக்கம் கட்டி தொங்கவிட்டு நூதன தண்டனை... மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

police

 

செல்போன் திருடிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கழுத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு லாரியின் முன்பக்கம் தொங்கவிடப்பட்டு சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து ஒடிசா மனித உரிமைகள் ஆணையம் போலீசாரிடம் விளக்கம்  கேட்டுள்ளது.

 

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டபடி இளைஞர் ஒருவர் லாரியின் முன்புறம் கட்டி தொங்கவிடப்பட்ட நிலையில் லாரி சாலையில் செல்லும் வீடியோ காட்சி ஒன்று அண்மையில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கெந்திப்பாரா மாவட்டத்திலுள்ள மார்ஷகாய் என்ற பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் லாரியில் உள்ள செல்போனை திருடிய குற்றத்திற்காக இப்படிப்பட்ட நூதன தண்டனை கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. லாரி ஓட்டுநரும், க்ளீனரும் சேர்ந்து இந்த தண்டனையைக் கொடுத்தாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து ஒடிசா மனித உரிமைகள் ஆணையம் ஜகத்சிங்ப்பூர் எஸ்.பிக்கு இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்