Skip to main content

மனிதாபிமானத்தை விட்டுக்கொடுப்பவர் அல்ல அடல்-சீதாராம் எச்சூரி

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
seetharam echuri

 

முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் தற்போது டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீதாராம் எச்சூரியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

 

அஞ்சலி செலுத்தியப்பின் அவர் வாஜ்பாய் பற்றி கூறியதாவது"அரசியலுக்காகவும், கொள்கை வேறுபாட்டுக்காகவும் மனிதாபிமானத்தை விட்டுக்கொடுப்பவர் அல்ல அடல், அதுதான் அவருடைய சிறப்பும் கூட. அவரை மாதிரியான ஒரு கொள்கை இந்த நாட்டில் பலருக்கு தேவைப்படுகிறது"என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு பொருந்தாத ஒன்று” - சீதாராம் யெச்சூரி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Sitaram Yechury said One country, one election is unfit for democracy

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

அந்த வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையில் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் எனக் கடந்த 5 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று (06-02-24) ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டக்குழுவின் பரிந்துரைகள் முற்றிலும் தவறாக இருக்கிறது. இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடியும் என்று அக்குழு நினைக்கிறது. அவர்கள் கருதுவது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதே எங்கள் கருத்து. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தன்மைக்கும் பொருந்தாதது. ஒரு அரசு பேரவையில் உறுப்பினர்களால் பெரும்பான்மையை இழந்த பிறகும் ஆட்சியில் தொடர்வது முற்றிலும் ஜனநாயகத்தன்மையற்றது” என்று கூறினார். 

Next Story

வாஜ்பாய் பயோ பிக்கின் டீசர் வெளியானது

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
vajpayee biopic teaser released

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. 

அந்த வரிசையில் பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.  

மேலும், படத்தை இந்த ஆண்டு வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படம் 2024 ஜனவரி 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘மெயின் அதல் ஹூன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.