
தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள், நெற்றியில் பொட்டு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி முதல்வர் லட்சுமய்யா, மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, மாணவர்களை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்துச் சென்று நெற்றியில் வைத்திருந்த பொட்டை அழிக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதில் கோபமடைந்த பெற்றோர்கள், பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பள்ளித் தலைவர் மல்லா ரெட்டி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மத அடையாளத்திற்காக மாணவர்களை உடல் ரீதியாக தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய பள்ளித் தலைவர், லட்சுமய்யாவை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.