Published on 17/06/2019 | Edited on 17/06/2019
பீகார் மாநிலத்தின் கயா, நவாடா, அவுரங்காபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோடையில் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 113 பேர் கடந்த இரண்டு நாட்களில் இறந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வரும் 30 ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுப்பதற்காக தற்போது வெப்பம் அதிகமாக உள்ள மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.