Published on 31/10/2020 | Edited on 31/10/2020
![Sardar Vallabhbhai Patel on his birth anniversary pm narendra modi in gujarat](http://image.nakkheeran.in/cdn/farfuture/qdubyagngtc4hrWfsybxFh0fdxRCloAuE5emFpfAojY/1604115524/sites/default/files/inline-images/pm8.jpg)
இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
![Sardar Vallabhbhai Patel on his birth anniversary pm narendra modi in gujarat](http://image.nakkheeran.in/cdn/farfuture/f086ByvtH8HuvLvS8G-lLKND_gTvEbYN7ImAPMJfcEc/1604115569/sites/default/files/inline-images/pm7%20%281%29.jpg)
இந்த நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி செலுத்தினார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
![Sardar Vallabhbhai Patel on his birth anniversary pm narendra modi in gujarat](http://image.nakkheeran.in/cdn/farfuture/LNFTVbk5kjI_1wlxTIZkf4u-cbNyP58apXrxX6t4a_0/1604115609/sites/default/files/inline-images/pm%20%281%29.jpg)
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.