Published on 26/07/2019 | Edited on 26/07/2019
புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த புதிய வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திருநள்ளாறு அருகே செயற்கைகோள் நிற்பது, தவறான தேசிய கீதம் என தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என அச்சிடப்பட்டதால் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. தமிழ் கி.மு. 300 முதல் வழக்கத்தில் உள்ளதாகவும், சமஸ்கிருதம் கி.மு. 2000 முதல் வழக்கத்தில் இருப்பதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.