உச்சநீதி மன்றம் உத்தரவையடுத்து பம்பையை கடந்து சபரிமலை ஏறிய 45 வயதான ஆந்திரா பெண் மாதவி, ஜயப்பா தா்ம சேனாவினரின் எதிர்ப்பால் பாதியிலேயே கீழே இறங்கினார்.
ஐப்பசி மாதம் பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை அதிகாலை ஐயப்பனை தரிசிக்க உச்சநீதி மன்றம் தீா்ப்பின் அடிப்படையில் அந்த குறி்ப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்வதை தடுக்கும் விதமாக கடந்த 11 நாட்களாக கேரளாவில் லட்சகணக்கான பெண்களும் இந்து அமைப்புகளும் பந்தளம் ராஜ குடும்பத்தினரும் போராடி வருகின்றனா்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே போராட்ட காரா்கள் பத்தனம்திட்ட, நிலக்கல், பம்பையில் நின்று கொண்டு சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த குறிப்பிட்ட வயது உடைய பெண்கள் செல்கிறார்களா? என சோதனை செய்து வாகங்களை அனுமதிக்கிறார்கள்.
இதில் காலை 10.30 மணிக்கு சோ்த்தலையை சோ்ந்த லிஜி என்ற இளம் பெண் சபரிமலைக்கு செல்ல பத்தனம்திட்ட வந்தடைந்தார். பின்னர் அவரை பஸ்நிலையத்தில் வைத்து 50-க்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றனா். இதனால் போலிசார் தங்களின் பாதுகாப்பில் லிஜியை வைத்துள்ளனா். இது சம்மந்தமாக பத்தனம்தி்ட்ட போலிசார் 50 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.
இதற்கிடையில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சோ்ந்த 45 வயதான பெண் மாதவி தனது பெற்றோர் மற்றும் 10 வயது சிறுமியோடு பம்பை வந்தார். இதை பார்த்த போராட்டகாரா்கள் அந்த பெண்ணை போக விடாமல் தடுத்து சுற்றி நின்று சரண கோஷம் எழுப்பினார்கள் உடனே போலிசார் அந்த பெண்ணை கைகோர்த்து வளையத்துக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக சபரிமலைக்கு அழைத்து செல்ல, பின்னர் கணபதி கோவில் தாண்டி மலை ஏறும் போது அங்கு நின்ற ஐயப்பா தா்ம சேனையினா் கோஷம் எழுப்பி தடுத்து நிறுத்தி இடையூறு செய்ததால் அந்த பெண், ”இதையும் மீறி என்னால் சபரிமலைக்கு போக முடியாது” என்று மலையில் இருந்து திரும்பி இறங்கி பம்பைக்கு வந்தார்.
இதே போல் பந்தளம் ராஜ குடும்பத்தினா் நாம ஜெபம் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இதே போல் நிலக்கல்லில் போலிசரால் பிாித்து எறியபட்ட பந்தலை மீண்டு கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.