நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் குளிர் நிலவி வருகிறது. புதுதில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு நேரங்களில் சில மாநிலங்களில் குளிர் 10 டிகிரி வரை இருக்கின்றது. குறிப்பாக புதுதில்லியில் முன் எப்போது இல்லாத அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. நேற்று உச்சகட்டமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருந்துள்ளது.
zoom in on the rickshaw and thank the heavens later pic.twitter.com/PFDvrlwxGw
— hayat ✨ (@sevdazola) January 2, 2020
இதுவரை வட மாநிலங்களில் குளிரின் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ரிக்ஷாகாரர் ஒருவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது வாகனத்தை ஓட்டிச்செல்லும் அவர், குளிருக்கு இதமாக ஜாக்கெட் அணிந்து செல்கிறார். அவரின் ரிக்ஷாவில் இருந்த நாய் ஒன்றையும் போர்வையால் மூடி குளிரில் இருந்து அந்த நாயை காத்துள்ளார். இந்த புகைப்படத்தை "Zoom in on the rickshaw and thank the heavens later" என்ற வரிகளுடன் இணையவாசி ஒருவர் பகிர்ந்துள்ளார்.