Skip to main content

ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் குவிக்கப்பட்டிருந்த தங்கம்... என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை...

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

one kg gold seized from swapna suresh locker

 

கேரளா தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவரது லாக்கரில் இருந்து ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தங்கக்கடத்தல் விவகாரம் கேரளா அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் அண்மையில் பிடிபட்டது. இந்தக் கடத்தல் விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் அவரது மனைவி, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. முடுக்கிவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் மற்றொரு முக்கியக் குற்றவாளியான பைசல் ஃபரீத் கடந்த வாரம் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

இதனையடுத்து, இந்த விசாரணை முடிவடைந்து ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோர் அடுத்த மாதம் 21-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் திருவனந்தபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் ஸ்வப்னா சுரேஷின் தனி லாக்கரை என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்ததில் 1 கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்