வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் எந்தெந்த சேவைகளுக்கெல்லாம் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, தொழில்நுட்பக் காரணத்தால் பணம் எடுக்க முடியாமல் போனால், அதற்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஏடிஎம்மில் பணம் எடுக்க முற்படும்போது, தொழில்நுட்பக் கோளாறு, ஏடிஎம்மில் பணம் இல்லாதது அல்லது தவறான பின் நம்பர் பதிவிடுவது உள்ளிட்ட காரணங்களால், சில சமயம் வாடிக்கையாளர்களால் பணத்தை எடுக்க முடிவதில்லை. இதுபோன்ற நேரங்களில், வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இனி அவ்வாறு வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதேபோல கணக்கில் உள்ள பணம் இருப்பு விவரத்தை பார்த்தல், பணம் அனுப்புதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.