Published on 12/02/2021 | Edited on 12/02/2021
![rakesh tikait](http://image.nakkheeran.in/cdn/farfuture/RiGcCJAyORY1wTlRuBaNXn5q8UjlWszsWGGpBGMqrMc/1613132227/sites/default/files/inline-images/rak-im.jpg)
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள், அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை வீடு திரும்பப் போவதில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத், "வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகே வீடு திரும்புதல் இருக்கும். சிங்கு எல்லை தொடர்ந்து எங்கள் அலுவலகமாக இருக்கும். மத்திய அரசு இன்று பேசுவதாக இருந்தாலும், 10 நாட்களில் பேசுவதாக இருந்தாலும், அடுத்த வருடம் பேசுவதாக இருந்தாலும் நாங்கள் தயார். டெல்லியில் உலோக ஆணிகளை நீக்காமல் டெல்லியிலிருந்து செல்லப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.