Published on 28/01/2023 | Edited on 28/01/2023

நடிகர்கள், பிரபலங்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது வாடிக்கையானது. அது போன்ற நேரங்களில் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் இடையே ஏற்படும் முரண்கள் மூலம் நடக்கும் சம்பவங்கள் வைரலாகும். அதுவே சமூக வலைதளங்களில் சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகும்போது விமர்சனங்களுக்கும் உள்ளாகும்.
அந்த வகையில் அண்மையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த இளைஞரின் செல்ஃபோனை தட்டிவிட்ட சம்பவம் வைரலாகி இருந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரிடம் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்ட நிலையில் பலமுறை செல்பி எடுத்தும் க்ளிக் ஆகவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரன்பீர் கபூர் அந்த இளைஞரின் செல்போனை வாங்கி பின்னோக்கி தூக்கி எரியும் அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.