நாய் ஒன்றுக்கு இருவர் உரிமையை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் அப்பகுதியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இவருடைய நாயை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முகேஷ் என்பவர் தான் ஒரு நாயை ரயில்வே நிலையத்தில் கண்டெடுத்துள்ளதாக முகப்புத்தகத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த நாயை வாங்குவதற்காக அவர் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு மகேஷ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முன்பாக அந்த நாயை பெறுவதற்கு அனுராக் என்பவர் முகேஷிடம் உரிமை கோரியுள்ளார்.
மகேஷ் தன்னுடைய நாய்தான் அது என்று உரிமையை கொண்டாடவே குழப்பமான முகேஷ், நாயை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலிசார் நாயை யாரிடம் ஒப்படைப்பது என்று குழம்பினர். இறுதியில் நாய்க்கு உரிமை கொண்டாடிய இருவரையும் இரண்டு இடங்களில் நிற்க வைத்து நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். நாய் மகேஷிடம் செல்லவே போலிசார் அவரிடம் நாயை ஒப்படைத்தனர். அனுராக்கை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.