புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவரும் சாசன் மருந்து தொழிற்சாலையால் தண்ணீர் மற்றும் சுற்று சூழல் கேடு விளைவது மட்டுமல்லாமல், அங்கே பலருக்கு திடீர் மாரடைப்பு, தோல் நோய் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் 4900 டன் உற்பத்தி செய்து வந்த சாசன் நிறுவனம் தனது உற்பத்தியை இருமடங்காக உயர்த்த அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
இந்த முடிவு புதுச்சேரி மக்கள் மனதில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த ஊர் மக்களும், சமூக சனநாயக அமைப்புகளும் ஒன்றுகூடி புதுச்சேரி தமிழ் சங்க அரங்கில் இன்று கலந்தாய்வுக்கூட்டம் நடத்தினர்.
மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழர் வாழ்வுரிமை கட்சி, தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள், கிராம மக்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் சாசன் தொழிற்சாலை விரிவாக்கம் எதிர்ப்பு குழு தொடங்கப்பட்டது. விரிவாக்கத்தை தடுக்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் இன்னும் தொடர்கிறது. அதனை எதிர்த்து உலகெங்கும் தமிழர்கள் போராடுகின்றனர். இந்த விழிப்புணர்வு பிற பகுதிகளில் உள்ள ஆபத்தான ஆலைகளுக்கெதிராகவும் பரவுவுதாகவே இந்த போராட்டக் குழு அமைக்கப்பட்டது பார்க்கப்படுகிறது.