Skip to main content

நீரவ் மோடியா..? நரேந்திர மோடியா..? கன்பியூஸ் ஆன ராகுல் காந்தி...

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடி வருகிறார்.

 

rahul

 

இதில் மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அவர், பெண்கள் சம உரிமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "வட இந்தியாவை ஒப்பிடும் போது தென் இந்தியாவில் பெண்கள் உரிமையும், பாதுகாப்பும் அதிகமாகவே உள்ளது. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்திய பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்" எனக் கூறினார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தென் இந்தியாவுக்கு என்ன செய்யும் என்ற கேள்விக்கு, " பாஜக வட இந்தியாவை பிரதானமாக கொண்டது. பாஜக வின் திட்டங்கள் எப்போதும் வடஇந்திய மக்களுக்கானதாக தான் இருக்கும், ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இருக்காது. காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து மாநிலங்களும் சமமே. மொழி மற்றும் கலாச்சாரத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் ஒன்றுதான். மேலும் மத்திய அரசில் தென் இந்தியாவிற்கு ஒரு பங்கு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்." என கூறினார்.

ஒரு மாணவி கேள்வி கேட்ட போது மாணவி தமிழில் வணக்கம் என சொல்ல ராகுலும் பதிலுக்கு தமிழில் வணக்கம் கூறியதுடன், தன்னை சார் என அழைத்த ஒரு மாணவியிடம் அப்படி அழைக்க வேண்டாம் எனவும் கூறினார்.

மேலும் காஷ்மீர் தீவிரவாதம் குறித்த கேள்விக்கு, "காஷ்மீர் மக்களுக்காக முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் இந்திய அரசியல்வாதிகள் உணர்வுபூர்வமா ஒன்றிணைய வேண்டும்" என கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஏற்கனவே பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படவில்லை என சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கிகளில் மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை பற்றி பேசும் போது ஏமாற்றி சென்ற ’நீரவ் மோடி’ என்பதற்கு பதிலாக ’நரேந்திர மோடி’ என கூறி பின்னர் திருத்தி பேசியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்