Published on 29/01/2020 | Edited on 29/01/2020
2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரதமர், மற்றும் நிதியமைச்சரை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
![rahul gandhi tweet about budget 2020](http://image.nakkheeran.in/cdn/farfuture/h18kpqkvSG_blNyl1CI0x6oBai-Z9TN7yNhRMWt3DVE/1580290206/sites/default/files/inline-images/fbzfbfbf.jpg)
இந்நிலையில், மோடி மற்றும் நிர்மலா சீதாராமனை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல், "மோடியும் அவரது பொருளாதார ஆலோசகர்களின் கனவுக் குழுவும் உண்மையில் நமது பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பியுள்ளனர்.
முன்னதாக:
மொத்த உள்நாட்டு உற்பத்தி: 7.5%
பணவீக்கம்: 3.5%
இப்போது:
மொத்த உள்நாட்டு உற்பத்தி: 3.5%
பணவீக்கம்: 7.5%
அடுத்து என்ன செய்வது என்று பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் சுத்தமாக தெரியாது" என பதிவிட்டுள்ளார்.