Skip to main content

தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்... தள்ளிவிடப்பட்ட ராகுல்... உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு...

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

rahul gandhi stopped on his way to hathras

 

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்றுகொண்டிருக்கையில் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தியதோடு, நடந்து செல்ல முயன்ற ராகுல்காந்தி மீது தடியடி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் செல்வதாக அறிவித்தனர். அதன்படி அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன் நடந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், நடந்து செல்லும் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டதோடு, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "இப்போதே போலீஸார் என்னைத் தள்ளி, லத்திசார்ஜ் செய்து தரையில் தள்ளிவிட்டனர். மோடி மட்டும்தான் இந்த நாட்டில் நடக்க முடியுமா, ஒரு சாதாரண மனிதனால் நடக்க முடியாதா? எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது, எனவே நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்" எனத் தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் வழக்கில் பெண்ணின் உடலைக் கூட குடும்பத்தினரைத் தகனம் செய்யவிடாமல் போலீஸார் இறுதிச்சடங்குகளைச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தியை போலீஸார் மூர்க்கத்தனமாகத் தடுத்துநிறுத்தும் காணொளி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்