பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடும் நிலையில் இருந்தது. இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என காங்கிரஸ் கட்சி மற்றும் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுத்த இந்திய தேர்தல் ஆணையம் சமந்தப்பட்ட மூன்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினர். இது குறித்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என தீர்ப்பு வழங்கினர். இதனால் திட்டமிட்டப்படி பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 12 ஆம் தேதி நாடு முழுவதும் 23 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பி. சந்தோஷ் , சேலம் .