Skip to main content

“பிரதமர் மோடி மணிப்பூரை விட இஸ்ரேல் மீதுதான் ஆர்வம் காட்டுகிறார்” - ராகுல் காந்தி

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Rahul Gandhi says Prime Minister Modi is more interested in Israel than Manipur

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மிசோரம் மாநிலத்தில் இன்று (16-10-23) காலை பாதயாத்திரை மேற்கொண்டார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் ஜஸ்வால் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “ஜி.எஸ்.டி என்பது வடிவமைக்கப்பட்டதே சிறு மற்றும் குறு வணிகத்தை அழிப்பதற்காகத் தான். மேலும், இந்தியாவில் வாழும் விவசாயிகளை பலவீனப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டது. பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பிரதமர் மோடியினுடைய உத்தியை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், அதை ஒற்றை வார்த்தையால் சுருக்கமாக கூறலாம். 

 

இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் அக்கறை காட்டும் பிரதமர் மோடி, மணிப்பூரில் நடப்பது குறித்து அக்கறை காட்டாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் நான் மணிப்பூருக்குச் சென்றிருந்தேன். மணிப்பூரை பா.ஜ.க முற்றிலும் அழித்துவிட்டது. இப்போது அது ஒரு மாநிலம் அல்ல இரண்டு மாநிலங்கள். மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் அங்கு பயணம் செய்வதை பிரதமர் மோடி முக்கியமாக கருதவில்லை. மணிப்பூர் மோதல் என்பது பிரச்சனையின் அறிகுறி மட்டுமே. மணிப்பூரில் நடந்தது இந்தியா என்ற சிந்தனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்