Skip to main content

"இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குங்கள்" -மத்திய அரசை வலியுறுத்தும் ராகுல் காந்தி...

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

rahul gandhi about unemployment of august

 

 

இளைஞர்கள் சந்தித்துவரும் வேலையின்மை பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காணவேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புற வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "வேலை வாய்ப்பு, மீண்டும் பணியமர்த்தல், வேலைவாய்ப்பு தேர்வு முடிவுகளை வெளியிடல் போன்ற நம் நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குங்கள்" என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்