![farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/p1rSazf4EVhVs9TJgY4o8i1sjCIB8umE0wYbD_VqQGU/1636780226/sites/default/files/inline-images/cds_0.jpg)
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தினத்தன்று, வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் ட்ராக்டர் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதனைத்தொடர்ந்து டெல்லி போலீசார் விவசாயிகள் பலரை கைது செய்தனர்.
இந்தநிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மூன்று கருப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பது என்ற தனது அரசின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்யும் விதமாக, குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.