கடந்த 14ஆம் தேதி ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு மாலை 3 மணிக்கு துணை ராணுவப்படையினர் பேருந்துகளில் சென்றுகொண்டிருந்தபோது, புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தனர் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள். கடந்த 15 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலான இதில் 40 வீரர்கள் பலியாகியுள்ளனர். அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என சி.ஆர்.பி.எப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னுமொரு வீரர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.40 வீரர்களை பலி கொண்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடம் பெரும் சோகத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் இறந்த சி.ஆர்.எப் வீரர்களுக்கு பேனர்கள் வைத்து, மெழுகுவத்தி ஏற்றி வைத்து தங்களின் அஞ்சலியை செலுத்திவருகின்றவர். இந்நிலையில், சமூக வலைதளத்தில் இறந்த வீரர்கள் இவர்கள்தான் என தவறுதலாக பரவிய புகைப்படங்களை வைத்து பலர் பேனர்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தவறாக பரவிய புகைப்படத்திலுள்ள வீரர்கள் விடுதலைப்புலி வீரர்கள் ஆவார்கள்.