Published on 27/05/2020 | Edited on 27/05/2020

தமிழகத்தில் மொத்தம் 18,545 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனாவுடன் புதுச்சேரிக்கு வந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த 4 பேர் கரோனா பாதிப்புடன் புதுச்சேரிக்கு வந்து நோய் பரப்பியதாக 4 பேர் மீதும் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.