Skip to main content

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி. சி-56 ராக்கெட்

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

PSLV flew furiously in the sky C-56 rocket

 

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது 

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் இன்று காலை 6.30 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் மற்றும் அரியலூர் விஞ்ஞானியின் 3 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் சுமந்து சென்றது. இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.

 

இஸ்ரோ தலைவர் சோமநாத் இது குறித்து தெரிவிக்கையில், “முதன்மை செயற்கைக்கோள் டிஸ் - சார் (DS-SAR) மற்றும் 6 இணை பயணிகள் செயற்கைக்கோள்கள் உட்பட ஏழு செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி. சி-56  வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்