பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு, பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வரும் விவேக் குமாரை பிரதமரின் தனிச் செயலாளராக தேர்வு செய்துள்ளது. விவேக் குமார், கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை பணியில் அதிகாரியாக தேர்வானவர். மேலும் விவேக் குமாா் பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை அவா் அந்தப் பொறுப்பில் தொடா்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training- DOPT) வெளியிட்டுள்ளது.
புதியதாக தேர்வு செய்யப்பட்ட பிரதமரின் தனிச்செயலாளர் விவேக் குமார் பற்றிய சில விவரங்களை பார்க்கலாம். இவரின் லிங்க்ட்இன் கணக்கின் படி, மும்பை ஐ.ஐ.டியில் வேதியியல் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக (DIPLOMATIC)பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராக விவேக் குமார் பணியாற்றினார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.